This Article is From Mar 14, 2019

ஆம் ஆத்மியுடன் கூட்டணி? தொண்டர்கள் விருப்பத்தை கேட்கும் ராகுல்!

ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்கு அழைக்கும் நிலையில், காங்கிரஸ் தனது அடி மட்ட தொண்டர்களின் விருப்பத்தை கேட்டு வருகிறது.

டெல்லி தலைவர்கள் குழுவை மீண்டும் சந்திக்க உள்ளார் ராகுல்.

New Delhi:

ஆம் ஆத்மியுடன் கூட்டணி வேண்டாம் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த நிலையில், கூட்டணி வைப்பது தொடர்பாக மீண்டும் காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் தொண்டர்களின் விருப்பத்தை தெரிந்த கொள்ள காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அங்கு முதல்வர்களை தேர்வு செய்ய மொபைல் போனில் சக்தி ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் பெறும் முறையை பயன்படுத்தியது.

ஹரியானாவில், ஆம் ஆத்மியுடன் காங்கிரஸை அரிவிந்த் கெஜ்ரிவால் கூட்டணிக்கு அழைக்கும் நிலையில், அடிமட்ட தொண்டர்களின் விருப்பத்தை தெரிந்த கொள்ள காங்கிரஸ் ஆர்வம் காட்டி வருகிறது. தொண்டர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பின்னர், டெல்லி தலைவர்கள் குழுவுடன் மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் ராகுல்.

இதுகுறித்த அரவிந்த கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றும், இதனால் ஹரியானாவில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் ஜேஜேபி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட்டடால் பாஜக 10 தொகுதிகளை இழக்கும். நிச்சயம் இதனை ராகுல் ஆலோசிக்க வேண்டும்.

முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என காங்கிரஸ் அறிவித்ததும், காங்கிரஸை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். ஒட்டு மொத்த நாடும் மோடி அமித்ஷாவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் போது, காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு உதவுவது போல் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

.