This Article is From May 28, 2019

லோக்சபா ‘மெஜாரிட்டியைத்’ தொடர்ந்து ராஜ்யசபாவிலும் ‘மெஜாரிட்டி’ பெறவுள்ள பாஜக- விரிவான அலசல்!

ராஜ்யசபாவில் இந்த ஆண்டு 10 இடங்கள் காலியாகும். அடுத்த ஆண்டு 72 இடங்கள் காலியாகும். 

லோக்சபா ‘மெஜாரிட்டியைத்’ தொடர்ந்து ராஜ்யசபாவிலும் ‘மெஜாரிட்டி’ பெறவுள்ள பாஜக- விரிவான அலசல்!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, தேர்தல் நடந்த 543 தொகுதிகளில் 303-ஐ கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.

New Delhi:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 2021 ஆம் ஆண்டிற்குள் ராஜ்யசபாவிலும் பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிகிறது. 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, தேர்தல் நடந்த 543 தொகுதிகளில் 303-ஐ கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் தே.ஜ.கூ-விற்கு 353 இடங்கள் உள்ளன.

ராஜ்யசபாவில் மொத்தமாக 250 இடங்கள் உள்ளன. அதில் பாஜக தலைமையிலான கூட்டணிக்குத் தற்போது 99 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிக்கு 65 இடங்கள் உள்ளன. பெரும்பான்மை பெற 124 இடங்கள் தேவைப்படும். 

ராஜ்யசபாவில் இந்த ஆண்டு 10 இடங்கள் காலியாகும். அடுத்த ஆண்டு 72 இடங்கள் காலியாகும். 

2020 ஆண் ஆண்டில் காலியாகும் 10 மாநிலங்களவை இடங்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவையாகும். அங்கு பாஜக-வுக்குப் பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 10-ல் 9 இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளது. 

உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் இருக்கும் 80 இடங்களில் பாஜக கூட்டணி, 64-ஐ கைப்பற்றியது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ், 15 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸுக்கு ஒரேயொரு இடம்தான் உள்ளது. 

பாஜக தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்டவைகளில் இந்த ஆண்டு முடிவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமேயானால், ராஜ்யசபாவில் சுலபமாக பெரும்பான்மை பெற்றவிடும். மாநிலத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தலைப் போன்று மெஜாரிட்டி பெற முடியும் என்று பாஜக தரப்பு நம்புகிறது. 

பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டும் அல்லாமல், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிஸ் உள்ளிட்டவைகளும் பல முக்கிய மசோதாக்களில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் பாஜக, மசோதாக்களுக்கு சுலபமாக ஒப்புதல் பெற முடியும். குறிப்பாக முத்தலாக் மசோதா, குடியுரிமை மசோதா போன்றவைகள் இரு அவைகளிலும் சுலபமாக நிறைவேற்றப்படும். 

.