This Article is From Jun 06, 2020

கேரள கர்ப்பிணி யானை எப்படி இறந்தது..?- விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!

விளை நிலங்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, பழங்கள் மற்றும் மிருகக் கொழுப்புகளில் நாட்டுப் பட்டாசு வைப்பது கேரளாவில் வழக்கம்.

கேரள கர்ப்பிணி யானை எப்படி இறந்தது..?- விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!

காயம் ஏற்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 20 நாட்கள் பட்டினியோடும், நீர் அருந்தாமலும் யானை சுற்றித் திரிந்திருக்கும் என்று தற்போது யூகிக்கப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • கர்ப்பிணி யானை பாலக்காடு மாவட்டத்தில் இறந்தது
  • தண்ணீரில் நின்றபடி யானை இறந்தது பலரது மனதை உருக்கியது
  • பல நாட்கள் பட்டினியாக சுற்றி வந்துள்ளது யானை
Thiruvananthapuram:

கேரளாவில் பாலக்காடு பகுதியில் கர்ப்பமாக இருந்த பெண் யானை ஒன்று சமீபத்தில் உயிரிழந்தது. பட்டாசுகள் நிரப்பப்பட்ட பழத்தினை உண்டதால் யானையின் வாய் பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சில நாட்கள் உணவு உண்ணாமல் தவித்து வந்த யானை ஒரு ஆற்றில் இறங்கி நின்று கொண்டே உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. பலர் இணையதளங்களில் யானைக்குத் தங்கள் இரங்கலை தெரிவித்திருந்தனர். இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் வெடி பொருட்களை சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கின் சாட்சியங்களைத் திரட்டுவதற்காக, வெடி பொருட்கள் செய்த இடத்திற்கே கைது செய நபரை அழைத்துச் சென்றுள்ளது கேரள போலீஸ் மற்றும் வனத் துறை தரப்பு. ஒரு விவசாயத் தோட்டத்தில் பட்டாசை இருவரோடு சேர்ந்து கைது செய்த நபர் உருவாக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

விளை நிலங்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, பழங்கள் மற்றும் மிருகக் கொழுப்புகளில் நாட்டுப் பட்டாசு வைப்பது கேரளாவில் வழக்கம். இதன் மூலம் காட்டு விலங்குகள் விளை பொருட்களைச் சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

அப்படி பட்டாசு வைக்கப்பட்ட தேங்காயை கர்ப்பிணி யானை சாப்பிட்டிருக்கும் என்றும், அதனால்தான் அதன் வாயில் பலத்தக் காயம் ஏற்பட்டது என்றும் சொல்கின்றனர் அதிகாரிகள். 

காயம் ஏற்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 20 நாட்கள் பட்டினியோடும், நீர் அருந்தாமலும் யானை சுற்றித் திரிந்திருக்கும் என்று தற்போது யூகிக்கப்படுகிறது. 

இந்த மொத்த சம்பவம் குறித்தும் கேரள முதல்வர் பினராயி விஜயன், “நீதியே வெல்லும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

.