This Article is From Mar 14, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மால், தியேட்டர், கல்யாண மண்டபங்களை மூடி அதிரடி உத்தரவு!!

கர்நாடகாவில் 76 வயதான ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாநில அரசு 5 அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மால், தியேட்டர், கல்யாண மண்டபங்களை மூடி அதிரடி உத்தரவு!!

ஒரு வாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் கர்நாடகத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா வைரசுக்கு முதல் பலி கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது
  • சுகாதார பணியாளர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது
  • மக்கள் கூடுமிடங்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்து வருகிறது.
Bengaluru:

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மாநில அரசு 5 அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இதற்கிடையே நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,500-ஆக உயர்ந்திருக்கிறது. 

கர்நாடகாவில் 76 வயதான ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாநில அரசு 5 அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றைப் பார்க்கலாம்...

1. சுகாதாரத்துறை பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் எப்போதும் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

2. உயிரிழப்பு நேர்ந்த கலபுராகி நகரில் ஒரு வாரத்திற்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

3. மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் மகாராஷ்டிர அருகே போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர். இதன் வழியே கர்நாடகத்திற்கு வரும் அண்டை மாநில பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. 

4. ஒரு வாரத்திற்கு அனைத்து மால்கள், சினிமா திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் எடியூரப்பா தடை விதித்துள்ளார். 

5. கர்நாடகத்திற்கு வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், 14 நாட்கள்  கட்டாய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். 

.