This Article is From Sep 02, 2018

கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் - 15 பேர் பலியானதால் பதற்றம்

இந்த நோய் குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா

கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் - 15 பேர் பலியானதால் பதற்றம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேராளவில், எலிக் காய்ச்சல் மூலம் இப்போது அடுத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்று எலிக் காய்ச்சலால் பெண் ஒருவர் பலியானார். இதனால் நோய் பரவலால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோயால் கடந்த இரண்டு நாட்களில் 8 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளம் காரணமாக நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக் கிழமை மட்டும் 28 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் 40 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

இந்த நோய் குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா. அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், டாக்சி சைக்லின் தடுப்பூசி போடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோழிக்கோடில் அதிகமாக இந்த பாதிப்பு இருப்பதால், அரசு மருத்துவமனியில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதால், அடுத்த இடத்தில் இருக்கும் தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன், நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், போதிய மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக்வும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு சுகாதார அதிகாரிகளின் தகவல் படி, மாநிலத்தில் 20 லட்சம் மக்கள் வெள்ளதில் இருக்க நேரிட்டுள்ளது. அவர்கள் அனைவருமே தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

.