This Article is From Dec 28, 2018

ஃப்ரான்ஸை தொடர்ந்து வரிவிதிப்பு எதிராக தைவானிலும் மஞ்சள் புரட்சி!

ஃப்ரான்ஸை தொடர்ந்து தைவானும் மஞ்சள் புரட்சியில் இறங்கியுள்ளது. கடந்த வியாழனன்று குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும்

ஃப்ரான்ஸை தொடர்ந்து வரிவிதிப்பு எதிராக தைவானிலும் மஞ்சள் புரட்சி!

ஃப்ரான்ஸை தொடர்ந்து தைவானும் மஞ்சள் புரட்சியில் இறங்கியுள்ளது. கடந்த வியாழனன்று குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும் என்றும், வரி விதிப்பில் பாரபட்சமின்றி செயல்பட கோரியும் ஆயிரக்கணக்கான தைவான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஞ்சள் நிற உடைகளை அணிந்து, கோஷமிட்டு நிதி அமைச்சகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வரிவிதிப்பு கொள்கைகள் சட்ட ரீதியாக இல்லை என்ற பதாகைகளை ஏந்தி போராடினர். 23 வயதான ஒரு இளைஞர் போராட்டத்தில் "இது எங்கள் எதிர்காலம் தொடர்பான போராட்டம்" என்று கூறி முழக்கமிட்டார்.

"ஹாங்காங்கிலும், சீனாவிலும் உள்ள சம்பளத்தோடு ஒப்பிட்டால், தைவானுக்கும் அவர்களுக்கும் பெரிய இடைவெளியுள்ளது. இங்கு தொழில்துவங்கவும் ஏற்ற சூழல் இல்லை. சிறு தொழில்கள் நலிந்துவிட்டன" என்று கூறி மக்கள் போராடி வருகின்றனர்.

20,000 பேருடன் ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டத்தில் வரும் வாரங்களில் மேலும் 10,000 பேர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃப்ரான்ஸில் நடைபெற்ற மஞ்சள் புரட்சியில் கலவரம் ஏற்பட்டு 10 பேர் இறந்தனர். தைவானில் இந்தப் போராட்டம் இப்போது எந்தவித பிரச்சனைகளுமின்றி அமைதியான முறையில் நடந்துவருகிறது. போராட்டத்ததுக்கு பிறகு ஃப்ரான்ஸ் பணிந்தது குறிப்பிடத்தக்கது.

தைவானிலும் போராட்டக்காரர்கள் "நிதி அமைச்சகம் தான் இதில் குற்றவாளி, அவர்கள் தான் தைவானில் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார்கள்" என்று தெரிவித்தனர்.

இது குறித்து பதிலளித்துள்ள நிதி அமைச்சகம் ''இது வரிவிதிப்பு முறையில் அதிருப்தி உள்ள சிலரது செயல்" என்று கூறியுள்ளது. மக்கள் இது அரசாங்கத்தின் தவறு என விமர்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள்.

.