தொழிலதிபருக்கு டிசம்பர் 27 நள்ளிரவு 11:44 மணியிலிருந்து டிசம்பர் 20 அதிகாலை 1:58 மணிக்குள் 6 மிஸ்டு கால்கள் வந்துள்ளன.
Mumbai: மும்பையைச் சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து 1.86 கோடி ரூபாய் பணம் நூதனமான முறையில் திருடப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை சைபர் க்ரைம் போலீஸர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
யார் என்று பெயர் குறிப்பிடப்படாத தொழிலதிபருக்கு டிசம்பர் 27 நள்ளிரவு 11:44 மணியிலிருந்து டிசம்பர் 20 அதிகாலை 1:58 மணிக்குள் 6 மிஸ்டு கால்கள் வந்துள்ளன. "சிம் ஸ்வாப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை திருடியிருப்பார்கள்" என சைபர் நிருபணர்கள் தெரிவித்துள்ளனர். வங்கி கணக்கிலிருந்து ஓடிபியை பெற்று பணத்தை கணக்குகளுக்கு மாற்ற இந்த முறையை கையாண்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
அவருக்கு வந்த 6 மிஸ்டு கால்களில் 2 இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளன. அவர் தனது போன் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்து சேவை நிலையத்தை அணுகியபோது. உங்கள் எண்ணை ப்ளாக் செய்யக்கோரி உங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதே என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த தொழிலதிபர் அதனை மறுத்துள்ளார்.
மேலும் இவரது கணக்கில் 15 கணக்குகளுக்கு 28 பணப்பரிவர்த்தனைகள் மூலம் 1.86 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். இதனை அலுவலகத்தில் உள்ள யாரோ ஒருவர் தான் செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. போலீஸும் இவரது போன் நம்பர் மற்றும் வங்கி தகவல்கள் மூலம் பணம் பறிபோனதை உறுதி செய்துள்ளது. மேலும், மக்களின் போன் ப்ளாக் செய்யப்பட்டால் உடனடியாக புகார் அளிக்கவும் என்றும் கூறியுள்ளது.