வழக்கமாக பாரம்பரிய உடைகளில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிடும் அனுபமா
ஹைலைட்ஸ்
- கேவலமான விஷயத்தை செய்வதற்காக நேரத்தை செலவிட்டவர்களே
- வீட்டில் அம்மா மற்றும் சகோதரிகள் யாரும் இல்லையா..?
- உபயோகம் உள்ளதாக செலவிடுங்கள் என்று கூறினார்
New Delhi: தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான கொடி படத்தின் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது Facebook பக்கத்தை யாரோ ஹக் செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அவர் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்ட Facebook பதிவில் "சில முட்டாள்கள் எனது முகப்புத்தக பக்கத்தை ஹக் செய்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்".
வழக்கமாகப் பாரம்பரிய உடைகளில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிடும் அனுபமா, அன்று தன்னுடைய முகம் வேறொரு உடலோடு மார்பிங் செய்யப்பட்டுள்ளதைக் கண்டார். மேலும் அந்த படத்திற்குக் கீழ் 'Swipe Up' என்று எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ட அனுபமா, இது போன்று எடிட் செய்யப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு, அவ்வாறு செய்தவர்களைக் கடுமையாகச் சாடினார்.
இப்படிப்பட்ட கேவலமான விஷயத்தைச் செய்வதற்காக நேரத்தைச் செலவிட்டவர்களே, உங்கள் வீட்டில் அம்மா மற்றும் சகோதரிகள் யாரும் இல்லையா..? என்று காட்டமாகக் கூறினார். மேலும் உங்களுடைய நேரத்தை இது போன்ற முட்டாள்தனத்தில் செலவிடாமல் உபயோகம் உள்ளதாகச் செலவிடுங்கள் என்று கூறினார்.
அவருடைய facebook பதிவுகள் உங்கள் பார்வைக்கு..
அனுபமா பரமேஸ்வரனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்
மலையாளத்தில் 2015ம் ஆண்டு நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில், மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனுபமா திரையுலகில் அறிமுகமானார். கடந்த ஆண்டு நடிகர் புனித்குமாருடன் 'நடசர்வபோமா' என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் கன்னடத்தில் அறிமுகமானார். அதே போல தமிழில் வெளியான ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் சதமானம் பாவாடி, தேஜ் ஐ லவ் யு, ஜோமோன்டி, கொடி போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார்.