This Article is From Dec 13, 2019

UK தேர்தலில் ‘இங்கிலாந்தின் டிரம்ப்’ ஜான்சான் வெற்றி; Brexit-க்கு முன்னுரிமை எனப் பேச்சு!

UK Election Result - "ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நாங்கள் பிரெக்சிட் ஒப்பந்தத்தை செயல்படுத்திக் காண்பிப்போம்"

Advertisement
உலகம் Written by

UK Election Result - இங்கிலாந்தின் இந்தத் தேர்தல், ‘பிரெக்சிட் ஒப்பந்தத்தை’ முன்வைத்துத்தான் நடந்தது.

UK Election Result - இங்கிலாந்தில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி, மொத்தம் இருக்கும் 650 தொகுதிகளில் 364-ஐக் கைப்பற்றியுள்ளது. ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி, வெறும் 203 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறார் ஜான்சன். அவர் இங்கிலாந்தின் டிரம்ப் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்தின் இந்தத் தேர்தல், ‘பிரெக்சிட் ஒப்பந்தத்தை' முன்வைத்துத்தான் நடந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்பதுதான் பிரெக்சிட் ஒப்பந்தம். அந்த கோஷத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தது கன்சர்வேடிவ் கட்சி. தேர்தல் பிரசாரத்தின்போதே, வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பிரெக்சிட் ஒப்பந்ததை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தார் ஜான்சன். அவரின் இந்தப் பிரசாரம் எடுபட்டிருப்பதாகவே தெரிகிறது. 

வெற்றியைத் தொடர்ந்து பேசிய போரிஸ் ஜான்சன், “ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நாங்கள் பிரெக்சிட் ஒப்பந்தத்தை செயல்படுத்திக் காண்பிப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 

பல இடங்களில் தொழிலாளர் கட்சிக்குச் சாதகமாக இருந்த வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். இந்த முறை பிரெக்சிட் ஒப்பந்தத்தை முதன்மையாக வைத்து வாக்களித்துள்ளீர்கள். அதற்கு நன்றி. உங்கள் நம்பிக்கையை வீண்டிக்க மாட்டேன்,” என்று தீர்க்கமாக பேசியுள்ளார். 
 

Advertisement
Advertisement