This Article is From Feb 10, 2020

'4 மாத குழந்தை போராட்டத்திற்கு செல்லுமா?' -ஷாகீன் பாக் மரணம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

4 மாத குழந்தையான முகம்மது ஜஹான், டெல்லியில் போராட்டம் நடைபெறும் ஷாகீன் பாக்கிற்கு கிட்டத்தட்ட நாள்தோறும் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த மாதம் 30-ம்தேதி கடுமையான குளிர் காரணமாக குழந்தை ஜஹான் உயிரிழந்தது.

'4 மாத குழந்தை போராட்டத்திற்கு செல்லுமா?' -ஷாகீன் பாக் மரணம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

4 மாத குழந்தை உயிரிழப்பு குறித்து 12 வயது சிறுவன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

New Delhi:

டெல்லி ஷாகீன் பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் 30-ம்தேதி 4 மாத குழந்தை முகம்மது ஜஹான் உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் '4 மாதக் குழந்தை போராட்டத்திற்கு செல்லுமா?' என்று கூறியுள்ளனர். 

உயிரிழந்த குழந்தை ஜஹானின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களைப் பார்த்து நீதிபதிகள் இந்த கேள்வியை முன் வைத்தனர். 

இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர்கள், சுற்றுச் சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் இளம் வயதிலேயே போராட்டக்காரராக மாறியுள்ளார் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தையை அவரது மழலைப் பள்ளியில் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று சிலர் அழைத்ததால், குழந்தையும் போராட்டக்காரராக மாறியுள்ளது என்று வாதிட்டனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'பொருத்தமில்லாத வாதங்களை முன்வைக்கக் கூடாது. அப்படி செய்தால் அதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இது நீதிமன்றம் தாய்மைக்கு நாங்கள் அதிக மதிப்பு அளிக்கிறோம்' என்று நீதிபதிகள் கண்டித்தனர்.

ஜஹான் உயிரிழந்தது தொடர்பாக வீர தீரத்திற்கான தேசிய விருதைப் பெற்ற சிறுமி ஜென் குணரத்ன சதாவர்தே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குழந்தையின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

4 மாத குழந்தையான முகம்மது ஜஹான், டெல்லியில் போராட்டம் நடைபெறும் ஷாகீன் பாக்கிற்கு கிட்டத்தட்ட நாள்தோறும் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த மாதம் 30-ம்தேதி கடுமையான குளிர் காரணமாக குழந்தை ஜஹான் உயிரிழந்தது. 

7-ம் வகுப்பு படிக்கும் மும்பையை சேர்ந்த மாணவவி சதாவர்தே கடந்த 2018-ல் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது அதில் சிக்கியவர்களை காப்பாற்றினார். இதற்காக அவருக்கு வீர தீரத்துக்கான விருதை குடியரசு தலைவர் வழங்கியுள்ளார். 

ஷாகின் பாக் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள சதாவர்தே, போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 4 மாத குழந்தையின் உயிரிழப்பு குழந்தைகள் உரிமை மற்றும் சமூக நீதி மீதான விதி மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்ததத்தை கண்டித்து டெல்லி ஷாகீன் பாக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

.