This Article is From Jul 05, 2020

உ.பியில் 8 காவலரை கொன்ற குற்றவாளியின் கூட்டாளியை கைது செய்தது காவல்துறை!

தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டு போலீஸ்காரர்களில் தேவேந்திர மிஸ்ராவும் ஒருவர். அவர் விகாஸ் துபேயின் உறவினர் பிரேம் பிரகாஷ் பாண்டே வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

விகாஸ் துபே 60 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவல்துறையினர் மீதான தாக்குதலில் ஒரு உயர் அதிகாரி உட்பட 8 காவலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்  இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக ரவுடி விகாஸ் துபேயை காவல் துறை தேடி வருகிறது. இந்த தேடுதலில் சம்பந்தப்பட்ட கும்பலைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சவுபேபூர் காவல் நிலையத்தை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அங்குள்ள முழு ஊழியர்களும் ஸ்கேனரின் கீழ் உள்ளனர். மாஃபியாவுக்காக உளவு பார்த்ததாக யாராவது குற்றவாளி எனக் கண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கான்பூர் காவல்துறைத் தலைவர் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூரை சேர்ந்த ராகுல் திவாரி, சவுபேபூர் காவல் நிலைய பொறுப்பாளர் வினய் திவாரியை அணுகியபோது, ​​விகாஸ் துபே மீது வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராகுல் திவாரி பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர மிஸ்ராவை அணுகிய பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

i6culgf

விகாஸ் துபே 60 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

விகாஸ் துபேயின் வீட்டில் தேவேந்திர மிஸ்ரா சோதனைக்குச் சென்றபோது ஸ்டேஷன் இன்-சார்ஜ் வினய் திவாரி தப்பி ஓடிவிட்ட சம்பவம் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்கு செல்லும் வழியில் மண் சாலை இருந்ததால் காவல்துறையினர் காரிலிருந்து இறங்கி நடக்கத்தொடங்கினர். இந்நிலையில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டு போலீஸ்காரர்களில் தேவேந்திர மிஸ்ராவும் ஒருவர். அவர் விகாஸ் துபேயின் உறவினர் பிரேம் பிரகாஷ் பாண்டே வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈடுபட்ட விகேஸ் துபே 60 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அரசியல் பின்னணி கொண்டவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று கான்பூர் மாவட்ட நிர்வாகம் அவரது வீட்டை இடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.