பாஜக தனியாக நின்று தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும் என்று சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- 'பாஜகவால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும்'
- 'தமிழ்நாட்டில் சினிமாதான் பார்ப்பார்கள், சட்டம் படிக்க மாட்டார்கள்'
- 'வேலை வாய்ப்பு பிரச்னை இருப்பது உண்மைதான்'
சசிகலா அனுபவமும், திறமையும் கொண்டவர் என்றும் அவர் விடுதலையாகி வெளியே வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
சசிகலா விடுதலையாகி வெளியே வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். அவர் திறமையும், அனுபவமும் கொண்டவர். ஒரு சமுதாயம் சசிகலா பின்னால் நிற்கிறார்கள். சசிகலா வெளியே வந்ததும், அவர் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் நடப்பது கஷ்டம்.
அவர் வெளியே வந்தாலும் 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் நிற்க முடியாது. வழக்கு நான்தானே போட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ்நாட்டில் எல்லாரும் சினிமதான் பார்ப்பார்கள். சட்டமெல்லாம் படிக்க மாட்டார்கள்.
சீனா நம்முடைய நெருங்கிய நண்பர் இல்லை. இருந்தாலும் சீனாவுடன் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும். என்.பி.ஆர். இன்னும் கொண்டு வரப்படவில்லை. அது வந்தபிறகு பேசிக் கொள்ளலாம்.
வேலை வாய்ப்பு பிரச்சினை இருப்பது உண்மைதான். பொருளாதார நிலை அமைப்பு மோசமாக உள்ளது. அதனைச் சரி செய்ய வேண்டும்.
பாஜக தனியாக நின்று தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும். ஆனால் அதற்காக பாஜக முயற்சி செய்யவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.