New Delhi:
புது தில்லி: தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஜெயித்பூர் பகுதியில், 1000 ரூபாய் கடன் வாங்கிய தகராறில் 24 வயது இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளனர் டெல்லி போலீஸ். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில், உடனே விரைந்து குற்றவாளியை கைது செய்துள்ளனர் போலீஸ். கத்தியால் குத்தப்பட்ட ரஞ்சன் காயங்களுடன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபொழுது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பெயரில், புனீத் எனும் இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் ஜெயித்பூர் காவல் நிலைய அதிகாரிகள். சம்பவம் நடந்த இடத்திலிருந்து, ரஞ்சனை குத்த பயன்படுத்தப்பட்ட பட்டன் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதை பழக்கத்திற்கு அடிமையான ரஞ்சன், புனீத் இருவருக்குள்ளும் 1000 ரூபாய் கடன் வாங்கிய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பின், கொலை செய்யப்பட்டவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.