This Article is From Nov 07, 2019

தாசில்தாரை கயிற்றுக்கு அப்பால் இருந்து மட்டுமே சந்திக்க வேண்டும் -அதிகாரி வைத்த பாதுகாப்பு கெடுபிடி

“விஜயா ரெட்டியின் கொலைக்குப் பிறகு நான் பீதியடைந்தேன்” என்றும் அதனால்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாக மகேஸ்வரி கூறுகிறார்.

தாசில்தாரை கயிற்றுக்கு அப்பால் இருந்து மட்டுமே சந்திக்க வேண்டும் -அதிகாரி வைத்த பாதுகாப்பு கெடுபிடி

நடுவில் கட்டப்பட்ட கயிறுக்கு அப்பால் மட்டுமே நின்று ஆவணங்களை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Hyderabad:

தெலங்கானாவின், அப்துல்லாபர்மத் என்கிற இடத்தில் தாசில்தாராக இருந்த விஜயா ரெட்டியை (Vijaya Reddy), அலுவலகத்துக்குள் நுழைந்து உயிருடன் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆந்திரபிரதேசம் கர்னூலில் உள்ள தாசில்தார் உமா மகேஷ்வரியை சந்திக்க விரும்பினால் நடுவில் கட்டப்பட்ட கயிறுக்கு அப்பால் மட்டுமே நின்று ஆவணங்களை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தாசில்தாரை பார்க்க விரும்புகிறவர்கள் மற்றும் ஆவணங்களை கொடுக்க விரும்புகிறவர்கள் பாதுகாப்பான தூரத்திலிருந்தே ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து “விஜயா ரெட்டியின் கொலைக்குப் பிறகு நான் பீதியடைந்தேன்” என்றும் அதனால்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்ததாக மகேஸ்வரி கூறுகிறார்.

தாசில்தார் விஜயாரெட்டியின் மீது கோபமடைந்த நில உரிமையாளர் அவரது அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார்.அவரை காப்பாற்ற முயன்ற இரண்டு ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

.