Read in English
This Article is From Oct 01, 2018

‘பிரிட்டிஷுக்குப் பிறகு அதிமுக தான் தமிழகத்தை அதிக நாள் ஆண்டுள்ளது!’- முதல்வர் பெருமிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அதிமுக தான் தமிழகத்தை அதிக நாட்கள் ஆண்டுள்ளது’ என்று பெருமிதத்துடன் பேசியுள்ளார்

Advertisement
தெற்கு

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதராணம் எம்.ஜி.ஆர், முதல்வர் பழனிசாமி

Chennai:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அதிமுக தான் தமிழகத்தை அதிக நாட்கள் ஆண்டுள்ளது’ என்று பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

நேற்று சென்னை, நந்தனத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் போது பேசிய தமிழக முதல்வரும் அதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளுருமான எடப்பாடி பழனிசாமி, ‘எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரை எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வருவது குறித்து நினைக்கக் கூட முடியாத சூழ்நிலை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அதிமுக தான் தமிழகத்தை அதிக நாட்கள் ஆண்டுள்ளது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா, கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றார். முதன் முதலாக ஒரு நடிகராக இருந்து, மாநிலத்தின் முதல்வராக முடியும் என்று நிரூபித்தவர் எம்.ஜி.ஆர் தான். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதராணம் எம்.ஜி.ஆர். 

Advertisement

எழைக் குழந்தைகள் பள்ளியில் இருந்து நிற்காமல் இருக்க எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்ட மகத்தான திட்டம் ‘மதிய சத்துணவுத் திட்டம்’ ஆகும். 

எம்.ஜி.ஆர் ஆட்சியிலிருந்த 1977 முதல் 1987 முதல் பல முன்னோடித் திட்டங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தார்’ என்று பேசினார். 

Advertisement

அவர் மேலும், தமிழக நீர்நிலைகளை பாதுகாக்க ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்றும், புதிதாக பன்னாட்டு விமான நிலையம் ஒன்று சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இறுதியாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement