This Article is From Jul 20, 2018

ட்விட்டர் ட்ரண்டிங்கில் ஹிட்டடித்த ராகுல்காந்தி

ராகுல்காந்தி கண் அடிக்கும் புகைப்படத்தை பலரும் மீமாக பகிர்ந்து வருவதால், அந்த புகைப்படம் ட்விட்டர் ட்ரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது

ட்விட்டர் ட்ரண்டிங்கில் ஹிட்டடித்த ராகுல்காந்தி
New Delhi:

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்த போதிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் செயல் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது உரையில் பாஜக மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில், தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று பிரதமர் மோடிக்கு கைகொடுத்து பின் கட்டியணைத்தார். ராகுல்காந்தியின் இந்த நடவடிக்கை ட்விட்டரில் பிரபலமாகியுள்ளது.

அதுபோல, தனது இருக்கைக்கு திரும்பி வந்த ராகுல்காந்தி, தனது சக கட்சி உறுப்பினரைப் பார்த்து சிரித்தபடி கண்ணடித்தார். அவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

 

ராகுல்காந்தி கண் அடிக்கும் புகைப்படத்தை பலரும் மீமாக பகிர்ந்து வருவதால், அந்த புகைப்படம் ட்விட்டர் ட்ரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதை பல முக்கிய பிரபலங்களும் பகிர்ந்துள்ளனர்.

 

 

 

 

இந்நிலையில், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வினி யாதவ்வும் அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

 

 

 

சமீபத்தில் மலையாள நடிகை பிரியா வாரியர் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்விட்டரில் ட்ரெண்டானது. தற்போது இந்த இரண்டையும் ஒப்பிட்டு மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.

.