Read in English
This Article is From Jul 11, 2018

தண்டவாள விரிசலை துணியால் கட்டிய ஷாக் வீடியோ - ரயில்வே கொடுத்த விளக்கம்

மும்பையில் விரிசலடைந்த ரயில் தண்டவாளத்தை, துணியை வைத்து ரயில்வே ஊழியர் ஒருவர் கட்டுவது போலான வீடியோ சமுக ஊடகத்தில் வைரலாக பரவியது

Advertisement
நகரங்கள் (with inputs from PTI)
Mumbai:

மும்பையில் விரிசலடைந்த ரயில் தண்டவாளத்தை, துணியை வைத்து ரயில்வே ஊழியர் ஒருவர் கட்டுவது போலான வீடியோ சமுக ஊடகத்தில் வைரலாக பரவியது. ஆனால் இந்த வீடியோவில் நடப்பதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை என்று மத்திய இரயில்வே செவ்வாய்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது.

அந்த வீடியோவை விளக்கிய மத்திய ரயில்வே, தண்டவாளத்தில் போல்ட்கள் அனைத்தும் சரியான இடத்தில் இருப்பதாகவும், அந்த துணி தண்டவாளத்தை இணைப்பதற்காக அல்ல அடையாளத்துக்காக கட்டப்பட்டது என்றும் கூறியது.

மும்பை புறநகரான கோவாண்டியில் இருந்து மார்க்கர் நிலையத்திற்கு செல்லும் ஹார்பர் வழித்தடத்தில் விரிசல் ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்குள் தண்டவாளம் சரி செய்யப்பட்டது. ஆனால் வைரலாக பரவிய அந்த விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

“மழை பெய்வதால், விரிசலடைந்த அந்த இடத்தை குறித்து வைக்க பெயின்ட் உதவாது. எனவே அந்த இடத்தை அடையாளப்படுத்த மட்டுமே துணி கட்டப்பட்டடது” என ரயில்வே அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதும் ஆர்.டி.ஐ ஆர்வலரான சமிர் ஜாவேரி, விளக்கத்தை ஏற்க மறுத்து இந்த சம்பவத்திற்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை தேவை என்கிறார்.

Advertisement
Advertisement