Read in English
This Article is From Aug 30, 2019

War And Peace: போரும் அமைதியும் கிளாஸிக் நாவல்தான் எனக்குத் தெரியும் -நீதிபதி விளக்கம்

போரும் அமைதியும் என்பது இன்னொரு நாட்டு போரைப் பற்றியது ஏன் இப்படிப்பட்ட ஆட்சேபணைக்குரிய புத்தகங்களான போரும் அமைதியும் போன்ற புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இதனை கோர்ட்டுக்கு விளக்கத்தான் வேண்டும் -நீதிபதி

Advertisement
இந்தியா Translated By

பீமா-கோரேகான் வழக்கில் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் வெர்னன் கொன்சால்வேஸ்

Mumbai:

பீமா-கோரேகான் வழக்கில் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட வெர்னன் கொன்சால்வேஸ் விவகாரத்தில் டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்' நாவல் குறித்த கேள்வியை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் “போரும் அமைதியும் டால்ஸ்டாய் எழுதிய கிளாசிக் என்பது எனக்கு தெரியும். குற்றப்பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டதை நான் படித்துப் பார்த்தேன். அந்தக் கையெழுத்து மிகவும் மோசமாக இருந்தது. எனக்கு போரும் அமைதியும் தெரியும். அதற்காக அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட புத்தங்களெல்லாம் குற்றம் இழைக்கத் தூண்டுபவை என்று நான் குறிப்பிடவில்லை” என்று தெரிவித்தார்.

எல்கர் பரிஷத் -பீமா கோரேகான் வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சரங் கோட்வால், குற்றம் சாட்டப்பட்ட கொன்சால்வேஸ் மற்றும் பிறரது ஜாமீன் மனு கோரிக்கையை விசாரித்தார். அப்போது கொன்சால்வேஸ் வீட்டிலிருந்து போலீஸார் கைப்பற்றிய ‘ஆட்சேபணைக்குரிய' பொருட்களில் சில சிடிக்கள், சில பல புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் டால்ஸ்டாய் எழுதிய  ‘போரும் அமைதியும் என்ற நாவலும் இருந்தது. இதனை காவல்துறையினர் குற்றமிழைப்பதற்கான ஆதாரமாக காட்டியுள்ளனர். இதற்குப் பின் #WarAndPeace என்ற ஹேஸ்டேக் ட்ராண்டானது.

Advertisement

காவல்துறையினர் கொன்சால்வேஸ் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பிற நூல்கள், சிடிக்கள் அதன் பெயர்களையும் குறிப்பிட்டனர். 

அதில் கபிர் கலா மஞ்ச்சின் ராஜ்ய தமன் விரோதி, மார்க்சிஸ் ஆர்கைவ்ஸ், ஜெய் பீமா காம்ரேட், போன்ற சிடிக்களும்  போரும் அமைதியும், மாவோயிஸ்ட்களை புரிந்து கொள்ளுதல், ஆர்சிபி ரிவியூ, நேஷனல் ஸ்டடி சர்க்கிள் வெளியிட்ட சுற்றறிக்கைகளின் நகல்கள் அவரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.

Advertisement

நீதிபதி “உங்கள் சிடி ‘ராஜ்ய தமன் விரோதி' என்ற தலைப்பே அரசுக்கு எதிராக ஒலிக்கிறதே, போரும் அமைதியும் என்பது இன்னொரு நாட்டு போரைப் பற்றியது ஏன் இப்படிப்பட்ட ஆட்சேபணைக்குரிய புத்தகங்களான போரும் அமைதியும் போன்ற புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இதனை கோர்ட்டுக்கு விளக்கத்தான் வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

கொண்டால்வேஸ் வழக்கறிஞர் மிஹிர் தேசாய் தன் வாதாமாக முன் வைத்ததாவது , கொன்சால்வேஸ் மீதான குற்றச்சாட்டை மற்றவர்களுக்கு வந்த மின்னஞ்சல்கள், கடிதங்கள் மூலமே காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.  கொன்சால்வேசிடமிருந்து ஆதாரங்கள் எதையும் காவல்துறை திரட்டவில்லை. ஆனால் புனே காவல்துறை தூண்டியதற்கான ஆதாரங்கள் அடங்கிய சிடிக்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தனர்.

Advertisement

“இந்த புத்தகங்கள் சிடிக்கள் இருப்பதாலேயே அவரைத் தீவிரவாதி என்று குற்றவாளியாக்க முடியுமா?” என்று நீதிபதி காவல்துறையினரை பார்த்து கூறியிருந்தார்.

காவல்துறையினர் சிடிக்களில் என்ன விதமான உள்ளடக்கம் உள்ளது என்பது தெரிவிக்க வேண்டுமென  கூறியிருந்தார். 

Advertisement