This Article is From Nov 17, 2018

ரூ.22 கோடிக்கு சொத்துகள் இருந்தும், சந்திரசேகர ராவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை!

சந்திரசேகர ராவ் தாக்கல் செய்த ஆவணங்களின் படி புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவிற்கு முதலமைச்சரான பின்னர் ரூ.7 கோடிக்கு சொந்தக்காரராக ஆகியுள்ளார் என்று தெரியவருகிறது.

ரூ.22 கோடிக்கு சொத்துகள் இருந்தும், சந்திரசேகர ராவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை!

தெலுங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

Hyderabad:

தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாநில தேர்தலுக்கான வேட்பு மனுவை சந்திரசேகர ராவ் தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ள சந்திரசேகர ராவ் தன்னிடம் கார் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் பெயரில் ரூ.22 கோடி மதிப்பிலான விவசாய நிலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணங்களின் படி சந்திரசேகர ராவ் புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவிற்கு முதலமைச்சர் ஆன போது ரூ.7 கோடிக்கு சொந்தக்காரராக ஆகியுள்ளார் என்று தெரியவருகிறது. அவருடைய சொத்துக்களில் ரூ.54 கோடி மதிப்பில் விவசாய நிலம் உள்ளது. சந்திரசேகர ராவின் மனைவி கே.ஷோபாவினுடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.94.5 லட்சமாகும்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் தனது தொழில் விவசாயம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் வருடத்திற்கு ரூ.91.5 லட்சம் வருமானம் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா பப்ளிகேஷன் மற்றும் தெலுங்கானா ஒலிபரப்பு நிலையத்திலும் பங்குகள் உள்ளன.

அவருடைய பாதுகாப்பிற்காக 2015 ஆம் ஆண்டு 4 புதிய கார்கள் வாங்கப்பட்டன. சந்திரசேகர ராவிற்கு ஹைதராபாத் மற்றும் கரிம்நகரில் இருக்கும் வீட்டின் மதிப்பு ரூ.5.10 கோடியாகும். சித்திபேட்டில் விவசாய நிலம் சாராத ரூ.60 லட்சம் மதிப்பிலான நிலம் சந்திரசேகர ராவிற்கு உள்ளது. இவர் மீது 63 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

தெலுங்கானாவில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

.