New Delhi:
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் பிரதமர் மோடியின் அலுவலகத்தை முற்றுகையிட ஒன்று கூடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஜந்தர்மந்தர் செல்லுமாறு காவல் துறையினர் ஆணையிட்டனர். மேலும், போராட்டத்திற்கான அனுமதி முறையாக வழங்கப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரமாக ஆளுநர் அணில் பைஜால் இல்லத்தின் முன் வேலை நிறுத்தம் செய்துள்ள டில்லி ஐஏஎஸ் அதிகாரிகளை கண்டித்து டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சனையில் பிரதமர் முறையிட்டு தீர்வு அளிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
முக்கிய 10 செய்திகள்- டில்லி ஐஏஎஸ் அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, "அரசியல் கட்சி சார்ந்து நாங்கள் பணியாற்றவில்லை. எந்த அரசு அமைந்தாலும், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்று வருகிறோம். இந்த நிலைமையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சட்டத்திற்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்" என்று ஐஏஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
- ஆம் ஆத்மி போராட்டம் நடத்த புது டில்லியில் அனுமதி வழங்கப்படவில்லை. குடியிருப்பு பகுதிகளில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது" என்று உயர் காவல் துறை அதிகாரி மதூர் வெர்மா கூறினார்.
- படேல் சொவுக், உத்கியோக் பவன், மத்திய செயலகம், ஜன்பாத், லோக் கல்யான் மார்க் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
- கூட்டாட்சி, அரசியலமைப்பின் செயற்பாட்டை சிதைத்துள்ள பாஜக கட்சியினை கண்டித்து பிரதமர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் இணைய உள்ளேன்." என்று சீத்தாராம் எச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் கட்சியை தவிர்த்து பெரும்பாலும் அனைத்து எதிர்கட்சிகளும் டில்லி முதலமைச்சர் அர்விந் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் டில்லி பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு அதற்கான தீர்வு தருமாறு கர்நாடக, மேற்கு வங்காள, கேரள, ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நிதி ஆயோக் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, "குழு இந்தியா" என கூறி, "அரசியல் பிரச்சனைகளை ஆட்சிக் குழு சந்தித்து வருகிறது... ஒருங்கினைத்த போட்டியுள்ள கூட்டாட்சியின்படி செயலில் உள்ளது" என்றார்.
- தலைமை செயலாளர் அன்சூ பிரகாஷ் தாக்கப்பட்டதாக காரணங்கள் கூறி, அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என ஐஏஎஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
- ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்ததிற்கு ஆதரவு அளித்த டில்லி ஆளுநர் மற்றும் மத்திய அரசு மீது அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
- கடந்த நான்கு மாதங்களாக, அமைச்சர்களின் அழைப்புகளை ஏற்காமல், சந்திப்புகளில் கலந்து கொள்ளாமல் அதிகாரிகள் இருப்பதால் ஆட்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேஜ்ரிவால் கூரியுள்ளார்.
- கடந்த ஒரு வாரங்களாக, முதலமைச்சர் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களை காண எவரையும் அனுமதிப்பதில்லை. ஆளுநர் மாளிகையின் முன் கூடியிருந்த அமைச்சர்களின் குடும்பங்கள், கட்சி தொண்டர்கள், நான்கு மாநில முதலமைச்சர்கள், ஆகியோரை உள்ளே அனுமதிக்கவில்லை.