Read in English
This Article is From Nov 04, 2019

Ayodhya Verdict : சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகளை பரப்பினால் கடும் நடவடிக்கை

இந்த உத்தரவில் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் சமூக ஊடகங்களில் மத பிரமுகர்களுக்கு எதிரான அவதூறு பதிவுகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Translated By

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17 அன்று ஓய்வு பெறும் நிலையில் அதற்கு முன்பாகவே அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகும்.

Ayodhya:

அயோத்தி விவகாரம் தொடர்பான தீர்ப்பு திங்களன்று வரவுள்ளது. பொதுமக்கள் எந்த மதத்தின்  உணர்வுகளும் புண்படும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவுகளை எழுதவோ, பகிரவோ கூடாது என்றும் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்படுமாறு அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் அனுஜ்குமார் ஷா தெரிவித்துள்ளார்.

 செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயுடன் பேசிய அனுஜ்குமார் ஷா, “எந்தவொரு சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்தும் எந்தவொரு அவதூறான சமூக ஊடக பதிவுகளை பகிர்ந்து கொள்ளவோ வேண்டாமென” கூறியுள்ளார். குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வை அவமதிக்கும் அல்லது புண்படுத்தக்கூடிய சமூக ஊடக பதிவினை இந்த உத்தரவு தடை செய்கிறது. 

இந்த உத்தரவில் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் சமூக ஊடகங்களில் மத பிரமுகர்களுக்கு எதிரான அவதூறு பதிவுகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அயோத்தி வழக்கினை 40 நாட்கள் விசாரித்து அக்டோபர் 15 அன்று தீர்ப்பினை எழுதியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  நவம்பர் 17 அன்று ஓய்வு பெறும் நிலையில் அதற்கு முன்பாகவே அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகும்.

Advertisement