This Article is From Jul 13, 2018

நவாஸ் ஷெரிப் கைது..!?- ஊடகங்களுக்கு செக் வைக்கும் பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானின் முன்னாள் பிரமதர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் இன்று கைது செய்யப்பட உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • ஜூலை 25-ம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடக்கவுள்ளது
  • நவாஸ் ஷெரிப்பின் வருகையை ஒட்டித்தான் இப்படி ஒரு ஆர்டர் போடப்பட்டுள்ளது
  • நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் கைது செய்யப்பட உள்ளனர்
ISLAMABAD:

பாகிஸ்தானின் முன்னாள் பிரமதர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் இன்று கைது செய்யப்பட உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் மீடியே ரெகுலேட்டர் அமைப்பு, ‘அரசியல் தலைவர்களின் எந்த வித நேரடி காட்சிகளையும் ஒளிபரப்பக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது. 

ஒருவேளை நவாஸ் ஷெரிப் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட உடன், அவர் செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுக்க வாய்ப்புள்ளது. அது மக்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்கச் செய்யும் என்று பாகிஸ்தான் அரசின் கணிப்பே, இந்த திடீர் தடை உத்தரவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

நவாஸ் ஷெரிப் மற்றும் மரியம் ஷெரிப் க்ராஃப்ட் வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று லாகூர் விமான நிலையத்துக்கு அவர்கள் வர உள்ளனர். அப்படி அவர்களும் வரும் பட்சத்தில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை கைது செய்யப்பட உள்ளதை ஒட்டி, பத்தாயிரத்துக்கும் மேலான போலீஸார் பாதுகாப்புக்காக லாகூர் விமான நிலைத்தைச் சுற்றி போடப்பட்டுள்ளனர். 

நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியினர், விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, அரசு தரப்பு லாகூருக்கு வரும் முக்கிய சாலைகளை முடக்கியுள்ளது. 

லண்டனில் நிலம் வாங்கியது தொடர்பாக நவாஸ் ஷெரிப் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த வாரம் நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்தது. வரும் ஜூலை 25 ஆம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

.