ராகுல் காந்தியின் வருகைக்கு பிறகு, வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hyderabad: டிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானாவில் இரண்டு பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதுகுறித்து, தெலுங்கானா பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷரவன் தாஸோஜ் கூறுகையில், அடில்லாபாத் மாவட்டத்தில் உள்ள பான்யின்சா டவுண் மற்றும் காமரெட்டியில் நடைபெறும் பொது கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொள்வார் என்றார். அவர் மகாராஷ்டிராவிலிருந்து பாயின்சாவிற்கு வருகிறார். பொதுக்கூட்டம் முடிவடைந்த பிறகு, ஹைதராபாத்திற்கு சென்று அங்கு சார்மினர் அருகில் காங்கிரஸ் கட்சியின் கொடியினை ஏற்றி ராஜீவ் காந்தி சப்தபவன் யாத்திரை நினைவு நாள் கூட்டத்தில் கலந்து .கொள்கிறார்
ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கே.ரோசய்யா சப்தபவன் யாத்திரை நினைவு விருதினை வழங்குவார் என்று முன்பு கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தெலுங்கானவில் தேர்தல் நடைபெறும் தேதிகளை அறிவித்த பின்னர், முதல்முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தெலுங்கானாவிற்கு வருகை தர உள்ளார். காங்கிரஸ் சார்பில் இட ஓதுக்கீடு குறித்து தெலுங்கு தேசம் கட்சி, சிபிஐ மற்றும் தெலுங்கானா ஜனா சமிதி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கட்சி தகவல் தெரிவிக்கின்றன.