Read in English
This Article is From Jun 27, 2018

அவங்கள நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துறோம் – டிரம்ப் பதிலடி

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

Advertisement
உலகம்
Washington:

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். “இந்தியா உள்பட அமெரிக்காவுடன் பெருவாரியான வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் 100% இறக்குமதி வரி விதிக்கிறார்கள். அவர்கள் அந்த வரி விதிப்பை நீக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா போன்ற நாடுகள், விதிக்கும் வரி வதிப்பு அதிகமாகவும், சமமம் அற்ற நிலையில் இருப்பதாகவும், "அவர்களை நிறுத்த சொல்லுங்கள் நாங்கள் நிறுத்துறோம்" என்ற பாணியில், தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார் டிரம்ப்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கின்றனர். அங்கு அமெரிக்க அரசு செயலாளர் போம்பியோ மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸை சந்தித்து பேசுகின்றனர்.

“ ஜி.7ம் மாநாட்டில் நான் கூறியது நினைவிருக்கிறது. எந்த வரியும் வேண்டாம் எந்தத் தடையும் வேண்டாம் என்றேன். எந்த நாடாவது ஒப்புக் கொண்டதா?” சமீபத்தில் கனடாவில் நடந்த ஜி.7 மாநாட்டில் நடந்தது பற்றி சுட்டிக்காட்டி பேசினார் டிரம்ப்.

“சில நாடுகள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகள் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கின்றனர். அப்படியானால் நாங்கள் வரியை உயர்த்தித்தான் ஆக வேண்டும்” என்கிறார்

“ நாங்கள் தான் அந்த வங்கி. எல்லோரும் சுரண்ட நினைக்கும் வங்கி. இனியும் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம். கடந்த ஆண்டு சீனாவிடம் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தோம். ஐரோப்பிய யூனியனிடம் 151 பில்லியன் டாலர்கள் இழந்தோம். அங்கு எங்கள் விவசாயிகளின் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடைகள் உள்ளது. அமெரிக்க கார் தயாரிப்புகளின் ஏற்றுமதியும் அங்கு கடினமாக உள்ளது” என்கிறார் அமெரிக்க அதிபர்.

டிரம்பின் இந்த பதிலிலிருந்து, வரி குறைப்பு நடவடிக்கையில் அமெரிக்கா இறங்குவதற்கான வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது.

Advertisement