This Article is From Aug 31, 2018

இந்தியா பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் - ஹெச்.1பி விசாவில் மாற்றம் இல்லை

அமெரிக்காவின் ஹெச்.1பி விசா நடைமுறையில் மாற்றம் செய்யப்படாது என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்துள்ளது

இந்தியா பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் - ஹெச்.1பி விசாவில் மாற்றம் இல்லை
Washington:

அமெரிக்காவின் ஹெச்.1பி விசா நடைமுறையில் மாற்றம் செய்யப்படாது என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் இந்திய அரசின் இரண்டு பேர் கொண்ட குழு நேரடியாக இந்த விவகாரத்தை எழுப்ப இருக்கும் நிலையில், அமெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளது.

“இந்த பிரச்சனை குறித்து பல சந்தர்ப்பங்களில் நாங்கள் அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளோம். வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடனும் பேசி வருகிறோம். செப்டம்பர் 6-ம் தேதி நடக்க உள்ள 2-2 என்ற பேச்சு வார்த்தையில் இது குறித்து பேசப்படும்” என்று சுஷ்மா சுவராஜ், பாராளுமன்றத்தில் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

இதை உறுதி செய்துள்ள வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர், செப்டம்பர் 6-ம் தேதி, இரு தரப்பிலும் இரண்டு பேர் பங்கேற்கும் 2-2 என்ற நேரடி பேச்சுவார்த்தையில் இந்த விவகாரம் பேசப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், ஹெச்.1பி விசா நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், பேச்சுவார்த்தை எவ்வளவு பலன் தரும் என்று தெரியவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

“டிரம்ப் தலைமையிலான அரசு, ஹெச்.1.பி விசா நடைமுறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த விசா நடைமுறையை மாற்ற முயற்சிகள் நடக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.

.