This Article is From Sep 12, 2018

“பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க பரிசீலனை செய்யப்படும்” - தமிழக முதலமைச்சர்

தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. குற்றச்சாட்டு கூறினால் குற்றவாளி ஆகிவிட முடியாது.

“பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க பரிசீலனை செய்யப்படும்” - தமிழக முதலமைச்சர்

சேலம்: நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, பெட்ரோல் டீசல் மீதான கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். வரியை மத்திய அரசுதான் உயர்த்திக் கொண்டே செல்கிறது என்றார்

மேலும், தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. குற்றச்சாட்டு கூறினால் குற்றவாளி ஆகிவிட முடியாது. தற்போதைய ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். எந்த துறையிலும் தவறு நடப்பதாக தெரியவரவில்லை என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.