This Article is From Sep 24, 2018

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு முக ஸ்டாலின், டிடிவி ஆகியோருக்கு அழைப்பு

"சென்னையில் இந்த விழா நடப்பதால், சென்னையைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு முக ஸ்டாலின், டிடிவி ஆகியோருக்கு அழைப்பு

சென்னை (பிடிஐ) எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா வரும் செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்க உள்ளது. இன்று வெளியான இந்த விழாவுக்கான அழைப்பிதழில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரது பெயரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதனை அடுத்து, சமூக வலைத்தளங்களில் இந்த அழைப்பிதழ் வைரலானது

டிடிவி தினகரன் தரப்பில் இந்த அழைப்பிதழ் குறித்துக் கேட்டபோது, அழைப்பிதழ் வந்தவுடன் கட்சியினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, "சென்னையில் இந்த விழா நடப்பதால், சென்னையைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. வேறு எதுவும் இல்லை" என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

.