This Article is From Oct 16, 2018

அதிமுக-வையும், இரட்டை இலை சின்னத்தையும் அமமுக மீட்டெடுக்கும்! - டிடிவி தினகரன்

அதிமுக-வையும், இரட்டை இலை சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீட்டெடுக்கும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

அதிமுக-வையும், இரட்டை இலை சின்னத்தையும் அமமுக மீட்டெடுக்கும்! - டிடிவி தினகரன்

90 சதவீத அதிமுக தொண்டர்கள் அமமுகவை ஆதரிக்கின்றனர்.

Chennai:

ஆளும் கட்சி தனது அடையாளத்தை இழந்து, சுயநலவாதிகளால் தேங்கி நிற்கிறது என்றும் 90 சதவீத அதிமுகவினர் அமமுகவை ஆதரிக்கின்றனர். மீதமுள்ளவர்கள் சுயநலம் காரணமாக ஆளும் கட்சியுடன் உள்ளனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் 47-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர் எவ்வளவு அரும்பாடுபட்டு இயக்கத்தை உருவாக்கினாரோ அதேபோல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவைக் கட்டிக் காத்தவர் ஜெயலலிதா.

துரோகத்தின் பிடியிலும், ஆதிக்கத்தின் வசமும், அதிமுக சிறைபட்டு கிடக்கும் கொடுமையை கண்டுதான் ஜெயலலிதாவின் 90 சதவீதத்திற்கு மேலான உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு உள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் தங்கள் சுயநலனுக்காக இருக்கும் ஒரு சிலரே.

ஜெயலலிதாவின் கொள்கைகளை மறந்த கூட்டத்தின் பிடியிலிருந்து அதிமுகவை மீட்க சட்டப் போராட்டத்தை மிகத்தீவிரமாகவே மேற்கொண்டுவருகிறோம். நல்ல தீர்ப்பை நீதிமன்றம் சொல்லும் நல்லநாள் வந்தே தீரும்.

ஜெயலலிதா வென்ற ஆர்.கே நகர் தொகுதியின் வெற்றி வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழகத்து மக்களின் எண்ண உணர்வின் பிரதிபலிப்பாக அத்தொகுதி மக்கள் நம்மை அங்கீகரித்தனர். இதுவே ஒவ்வொரு தேர்தல் களத்திலும் பிரதிபலிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

.