This Article is From Sep 23, 2018

முதலமைச்சர், காவல்துறை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் கைது!

இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அவரை கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர், காவல்துறை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் கைது!

எம்.எல்.ஏ கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலானது

Chennai:

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர், சென்னை காவல்துறை அதிகாரிகளை தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவரது பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலானது

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்க்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

.