This Article is From Jun 14, 2020

கொரோனா பாதிக்கப்பட்டு சிக்சை பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவை நலம் விசாரித்த முதல்வர்!!

இந்நிலையில் இன்று காலை முதல்வர் பழனிசாமி, தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழனியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில், தற்போது அ.இ.அ.தி.மு.க ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களில் பழனி மட்டுமே வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினரா இருந்துவருகிறார். இவர் கடந்த இரு மாத காலங்களாக மக்களுக்கு நிவாரண பணி செய்து வந்திருந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல்வர் பழனிசாமி, தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழனியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

Advertisement

மேலும், “தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!“ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement