Read in English
This Article is From Feb 04, 2019

மக்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்!

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் உள்ளது

Advertisement
தமிழ்நாடு

அதிமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

Chennai:

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று முதல் அதிமுக சார்பாக போட்டியிடுபவர்கள் விருப்ப மனு அளிக்கும் பணி இன்று தொடக்கம்.

2019ம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளது. காங்கிரஸூடன் தான் கூட்டணி என்பதை திமுக அறிவித்துவிட்டது.

இந்நிலையில், அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் தனித்து போட்டிடுவது மற்றும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பேச்சுவார்த்தை மற்றும் களப்பணிகளை கவனித்து வருகிறது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பமுடையவர்கள் இன்று முதல் அவர்களது விருப்ப மனுவை சமர்ப்பித்து வரலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், இன்று முதல் 10-2-2019 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.25,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என குறிப்பிட்டிருந்தது.

Advertisement