மறைந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சமூக நீதிக் காவலர் என்று ஜெயலலிதாவுக்கு அவர் புகழாரம் சூட்டினார். “ அம்மா தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69% இட ஒதுக்கீடு அளித்தவர். அவர் சமூக நீதியின் நாயகி. அதனால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்றார்.
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க மீண்டும் கையில் எடுத்த பிறகு, துணை முதல்வர்க் இந்த கருத்தை கூறியுள்ளார். பெரியார் மற்றும் அண்ணாவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என அ.தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணித்த சில மாதங்களில் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. பெரியார் மற்றும் அண்ணா மரணித்து பல ஆண்டுகள் கழித்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.