This Article is From Jan 23, 2019

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும்: ராம்தாஸ் அத்வாலே

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும்: ராம்தாஸ் அத்வாலே

தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சி கூட்டணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளதால், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் இணைய வேண்டும்.

ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தது போன்று இரு அணிகளும் இணைய வேண்டும். இது தொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்று அவர் கூறினார்.

.