This Article is From Feb 25, 2019

அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள..! உள்ளே விளக்கம்

அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதற்கான முடிவுகளை allindiabarexamination.com என்ற வலைப்பக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள..!  உள்ளே விளக்கம்

AIBE Result 2019: அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு முடிவுகளை @ Allindiabarexamination.com தெரிந்துகொள்ளாலம்.

அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு அல்லது AIBE XIII 2019 தேர்வு முடிவுகள் விரைவில் அதன் அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான Allindiabarexamination.comல் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த டிசம்பர் 23, 2018ல் நடைபெற்ற இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை அகில இந்திய பார் கவுன்சில் வெளியிட்டது. இந்நிலையில், ஆட்சேபனைகள், ஏதாவது இருந்தால், அடுத்த 10 வேலை நாட்களுக்குள் (ஜன.10, 2019க்குள்) objectionsaibe11@gmail.comல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் எந்த ஆட்சேபனை புகார்களும் வரவில்லை. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

வழக்கறிஞராக பதிவு செய்த இரண்டு ஆண்டுகளில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அப்படி தேர்ச்சி பெறாத வரை நீதிமன்றத்திலோ, தீர்ப்பாயத்திலோ வழக்கறிஞராக பணியாற்ற முடியாது. இந்த தேர்வு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

.