ஆல் இந்தியா வழக்கறிஞர் தேர்வு மொத்தம் 40 நகரங்களில் நடத்தப்பட்டன.
New Delhi: ஆல் இந்தியா வழக்கறிஞர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்வானவர்கள் இந்திய பார் கவுன்சிலின் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்வார்கள்.
தேர்வர்களின் அடிப்படை அறிவு, வழக்கறிஞர் தொழில் செய்வதற்கான குறைந்த பட்ச தகுதி உள்ளிட்டவற்றை சோதிக்கும் தேர்வுகாக இந்த தேர்வுகள் அமைந்தன. இதேபோன்று தேர்வர்களின் பகுத்தறியும் திறமை, புரிந்துணர்வு, அடிப்படை சட்டங்களில் உள்ள தெளிவு உள்ளிட்டவை குறித்தும் தேர்வில் வினாக்கள் எழுப்பப்பட்டன.
ஆல் இந்தியா வழக்கறிஞர் தேர்வு மொத்தம் 40 நகரங்களில் நடத்தப்பட்டன.
தகுதியுள்ள வழக்கறிஞர்கள் மட்டுமே தொழிலுக்கு வர வேண்டும் என்பது இந்த தேர்வின் நோக்கமாகும். இதன் முடிவுகள் கடந்த மாதம் 25-ம்தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், பின்னர் மார்ச் மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணைய தளமான allindiabarexamination.com.-ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுகள் கடந்த டிசம்பர் 23-ம்தேதி நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக விடைகளும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.