This Article is From Sep 09, 2020

பிஇ அரியர் தேர்வு ரத்து என்ற முதல்வர் பழனிசாமியின் முடிவு தவறானது: AICTE தலைவர் கருத்து

அரியர் தேர்வு ரத்து தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் ஏஐசிடிஐ தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறது

பிஇ அரியர் தேர்வு ரத்து என்ற முதல்வர் பழனிசாமியின் முடிவு தவறானது: AICTE தலைவர் கருத்து

தமிழகத்தில் பிஇ அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அணில் சக்ஸரபுதே தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி இன்ஜினியரிங் படிப்புகளுக்கான அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். 

இதனையடுத்து தமிழக அரசின் இந்த முடிவு ஏற்புடையதல்ல ஏஐசிடிஐ தரப்பில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இமெயில் வந்ததாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.

ஆனால், ஏஐசிடிஐ தரப்பில் இருந்து தமிழக அரசுக்கோ உயர்கல்வித்துறைக்கோ மின்னஞ்சல் வரவில்லை என்றும்,  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ள மின்னஞ்சலைக் காட்டும்படியும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியிருந்தார். மேலும், அரியர் தேர்வு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏஐசிடிஐ தலைவர் அணில் சக்ஸரபுதே தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர், தமிழகத்தில் பிஇ அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு தவறானது என்று விளக்கமளித்தார். மேலும், இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பட்டது, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்படவில்லை என்றும்  விளக்கமளித்துள்ளார்.


 

.