This Article is From Dec 18, 2018

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

இதனிடையே கடந்த ஜூன் 20-ந் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில்,

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

.