This Article is From Jun 19, 2018

எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018 முடிவுகள் வெளியானது!

2018 ஆம் ஆண்டுக்கான எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement
Education
New Delhi:

2018 ஆம் ஆண்டுக்கான எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ்-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியானது. இந்தத் தேர்வை எழுதிய மாணவர்கள், எய்ம்ஸ் இணையதளத்தில் சென்று முடிவை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான எய்ம்ஸ் தேர்வு மே மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடந்தன. இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வரும் ஜூலை மாதம் கவுன்சிலிங் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வின் மூலம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருக்கும் 9 எய்ம்ஸ் கல்லூரிகளில் 807 மருத்துவ கல்வி இடங்கள் நிரப்பப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்வில் 2649 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எப்படி எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018 முடிவுகளைப் பார்ப்பது?

எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் இணையதளத்துக்குச் சென்று ரிசல்ட் பட்டனை சொடக்கவும்

எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018 முடிவுகள் என்றிருக்கும் பட்டனை க்ளிக் செய்யவும்

கேட்கப்படும் தகவல்களை கொடுக்கவும்

தகவல்களை பூர்த்தி செய்த பின்னர் சப்மிட் செய்து முடிவைத் தெரிந்து கொள்ளவும்

கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2017-க்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. சென்ற ஆண்டு 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதி 4905 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலும், நிஷிதா புரோகித் என்ற மாணவர் தான் சென்ற ஆண்டு 100 சதவிகிதம் மதிப்பெண் எடுத்து முதலிடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மற்றும் ஜிப்மர் எம்.பி.பி.எஸ் தேர்வுக்கான முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 

 
Advertisement