This Article is From Jun 20, 2020

கால்வான் பள்ளத்தாக்கு தியாகங்கள் வீண்போக விடமாட்டோம்: தலைமை தளபதி

இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது தீர்மானத்தை நிரூபித்துள்ளன

கால்வான் பள்ளத்தாக்கு தியாகங்கள் வீண்போக விடமாட்டோம்: தலைமை தளபதி

கால்வான் பள்ளத்தாக்கு தியாகங்கள் வீண்போக விடமாட்டோம்: தலைமை தளபதி

New Delhi:

அமைதியை காக்க நாடு எப்போதும் பாடுபடும் என்றும் கால்வான் பள்ளத்தாக்கு தியாகங்கள் வீண்போக விடமாட்டோம் என்றும் தலைமை தளபதி ஆர்.கே.எஸ் பதவுரியா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடந்த ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்திய விமானப்படைத் தலைமை தளபதி பதவுரியா பேசயதாவது, "மிகவும் சவாலான சூழ்நிலையில் உள்ள மகத்தான நடவடிக்கைகள் எந்த நிலையிலும் இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது தீர்மானத்தை நிரூபித்துள்ளன," என்று கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா வீரர்களுக்கு இடையே நடந்த வன்முறை குறித்து அவர் கூறினார். 

எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம். கால்வானில் துணிச்சல்மிக்க வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன் என்றார்.

பாதுகாப்பு சூழ்நிலை கருதி நமது பகுதியில் ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

ராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்ட போதும், உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணமாக சீன நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, எனினும், எல்லைக் கோட்டுப் பகுதியில் தற்போதைய நிலைமையை அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என்றார்.  

IAF தனது புதிய AH-64E அப்பாச்சி "டேங்க் பஸ்டர்" தாக்குதல் ஹெலிகாப்டர்களை லடாக்கில் நிறுத்தியுள்ளது. இப்பகுதியில் மிக் -29 ஜெட் போர் விமானங்கள் ரோந்து பணியில் பறப்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

லடாக்கில் நடந்த இந்தியா - சீனா மோதல் தொடர்பாக கலந்தாலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை.எல்லைக் கட்டுப்பாட்டுப்  பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது என மோடி கூறினார்.

.