This Article is From May 10, 2019

பாகிஸ்தானில் இருந்து டெல்லியை நோக்கி வந்த ஜெட் விமானத்தால் பரபரப்பு!!

இந்திய விமானப்படையின் துரித நடவடிக்கையால் ஜெட் விமானம் இடை மறிக்கப்பட்டு ஜெய்ப்பூரை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டது.

ஜெட் விமானத்தின் பைலட்டுகளிடம் விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

New Delhi:

பாகிஸ்தானில் இருந்து டெல்லியை நோக்கி வந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய விமானப்படையினர் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையால் அந்த ஜெட் விமானம் இடை மறிக்கப்பட்டு ஜெய்ப்பூரை நோக்கி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. 

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து வந்த விமானம் ஜார்ஜியா நாட்டிற்கு சொந்தமானதாகும். வான்வெளியில் அத்துமீறிய புகாரின் பேரில் ஜார்ஜியா மீது இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது. பிடிபட்ட விமானத்தின் பைலட்டுகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீப காலமாக உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் ஜெட் விமானம் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய அதிகாரிகள் இடை மறித்த ஜார்ஜியா விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும். சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கு ஏற்ற விமானங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 
 

.