Read in English
This Article is From Jun 05, 2018

குஜராத்தில் விமானப் படை விமானம் எதிர்பாராத விதமாக விபத்து: விமானி பலி!

குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில், பயிற்சியில் இருந்த போது விமானப் படை விமானம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது

Advertisement
இந்தியா

Highlights

  • IAF's Jaguar that crashed in Kutch is a deep-penetration strike jet
  • IAF Jaguar aircraft was on a routine training mission
  • Court of inquiry has been ordered into the crash

குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில், பயிற்சியில் இருந்த போது விமானப் படை விமானம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், விமானத்தை ஓட்டிய விமானி இறந்துள்ளார்.

குஜராத்தின் ஜாம்நகரில், இந்திய விமானப் படையின் தளம் இருக்கிறது. இங்கிருந்து, ஜாக்குவார் விமானத்தை இன்று காலை எடுத்துள்ளார் காமரேட் சஞ்சய் சௌகான். அவர் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், அருகிலிருந்த விலங்குப் பண்ணையல் விமானம் மோதியுள்ளது. அங்கிருந்த சில மிருகங்கள் இந்த விபத்தால் உயிரிழந்தள்ளது. விமானியும் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இது குறித்து விமானப் படை தரப்பு, `இன்று காலை எப்போதும் பயிற்சிக்கு எடுப்பது போல், ஜாக்குவார் விமானத்தை விமானி எடுத்துச் சென்றார். ஆனால், விமானம் விபத்துக்கு உள்ளானது. 10:30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது' என்று கூறபட்டுள்ளது. 

 

சமீபத்தில் தான் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அஸ்ஸாமில் விபத்துக்கு உள்ளாகி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மீண்டும் விமானப் படை விமானம் விபத்துக்கு உள்ளானது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, ஓட்டிச் செல்லப்பட்ட விமானம் மிகவும் பழமையானது என்பதுதான். விபத்துக்கு உள்ளான ஜாக்குவார் விமானம் 1979 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டு காலமாக அதில் செயல்பாட்டில் தான் இருந்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 1,350 கிலோ மீட்டர் ஆகும். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Advertisement