বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 31, 2019

மிக்-27 ரக போர் விமானம் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 யுபிஜி ரக போர் விமானம் இன்று காலை ராஜஸ்தானின் தெற்கு பகுதியான சிரோஹியில் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

மிக்-27 ரக போர் விமானம் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

Jodhpur:

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 யுபிஜி ரக போர் விமானம் இன்று காலை ராஜஸ்தானின் தெற்கு பகுதியான சிரோஹியில் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.

பார்மர் விமானப்படை தளத்திலிருந்து சென்ற மிக்-27 ரக போர் விமானம், ஜோத்பூரில் இருந்து 120 கி.மீ தொலைவில், சிரோஹி அருகே ஷோகான்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இஞ்சின் கோளாறு காரணமாக இன்று காலை 11.45 மணி அளவில் திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் வந்துள்ளன.

மிக்-27 1980ன் முற்பகுதியில் இந்திய வாங்கிய போர் விமானம் ஆகும். 1999 நடந்த கார்கில் போரில் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது. இது மலைகளிலும் இலக்குக்களைத் துல்லியமாக தாக்கும் சக்தி வாய்தது ஆகும்.

Advertisement

இதேபோல், ராஜஸ்தான் ஜெய்சால்மர் பகுதியில் கடந்த மாதம் மிக்-27 ரக போர்விமானம் ஒன்று பயிற்சி வகுப்பின்போது விபத்துக்குள்ளானது. அந்த விபத்தின் போதும் அதனை இயக்கிய விமானி பத்திரமாக உயிர்தப்பினார்.


 

Advertisement
Advertisement