বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 08, 2019

ராஜஸ்தானில் மிக் போர் விமானம் விபத்து - பைலட் உயிர் தப்பினார்

வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மிக் - 21 ரக போர் விமானம் ராஜஸ்தானில் விபத்தை சந்தித்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

Highlights

  • The IAF Bison fighter jet crashed in Bikaner soon after take-off from Nal
  • Sources suggest jet suffered a bird-hit, but pilot ejected successfully
  • Court of Inquiry ordered into the crash, and area has been cordoned off
New Delhi:

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் இன்று விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பைலட் உயிர் தப்பினார். பிகானிரின் தானி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கின்றது. 

மிக் 21 ரக போர் விமானம் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. இன்று மதியம் எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது. முதல்கட்டமாக பறவை மோதியதால் விபத்து நடந்திருப்பதா தகவல்கள் வெளியாகின. 
 

இதுகுறித்து பிகானிர் போலீஸ் எஸ்.பி. மோகன் சர்மா கூறுகையில், முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 

முதலில் கடந்த 1960 களில் நடைபெற்ற இந்தியா - சீனா போரின்போது மிக் ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை கடந்த 2006-ல் அப்கிரேட் செய்யப்பட்டு மிக் 21 போர் விமானங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. 

Advertisement