Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 08, 2018

ஏர் இந்தியா ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மும்பையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

மும்பை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் நேற்றிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது

Advertisement
இந்தியா

மும்பை சத்திரபதி விமான நிலையத்தில் சில விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

Mumbai:

மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஒப்பந்த தார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு விமானங்கள் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா ஊழியர்கள் நேற்றிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த பயணிகள் சிலர் ட்விட்டரில் குமுறத் தொடங்கியுள்ளனர்.

ஆனந்த் சிவகுமாரா என்பவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொல்கத்தா - மும்பை விமானம் 3 மணிநேரம் தாமதம் ஆகியுள்ளது. இதுபற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஊழியர்களும் இங்கு காணப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement