விமானியின் இறப்பை சவுதியில் இருக்கும் தூதரகம் உறுதி செய்துள்ளது
ஹைலைட்ஸ்
- Air India pilot collapsed in washroom of a Riyadh hotel
- The pilot was working out at the time of the incident
- Police had to break the door of the washroom to get to him
Riyadh/New Delhi: ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானி ரித்விக் திவாரி, சவுதி அரேபியாவில் இருக்கும் ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
27 வயதாகும் ரித்விக், சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் இருக்கும் ஒரு உணவகத்தில் தங்கி இருந்துள்ளார். ஓட்டலில் இருக்கும் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்துவிட்டு, அங்கிருக்கும் குளியலறைக்குச் சென்றுள்ளார் ரித்விக். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குளியலறைக்குச் சென்றுள்ள ரித்விக் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். வெகு நேரம் ரித்விக்கின் குளியலறை கதவு திறக்கப்படாததால், அங்கு இருந்த போலீஸ் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். உள்ளே, ரித்விக் உணர்வில்லாமல் கீழே கிடந்ததைப் பார்த்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் போலீஸார். மருத்துவமனையில், அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரித்விக்கின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக சவுதியில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் அனில் நௌட்டியால், `குளியலறையில் ரித்விக் கீழே கிடந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரவிக்கப்பட்டுவிட்டது. இந்த இறப்பு குறித்த முழு அறிக்கையையும் இங்கு இருக்கும் தூதரக அதிகாரிகள் படிக்கவில்லை. ஆனால், அவர்களிடம் இது தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் தெரிவித்து வருகிறோம். ரித்விக்கின் உடலை இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதற்கு அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது' என்றார்.