அரசு தரப்பில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமானம், அரசிடம் இருந்து 21.21 பில்லியன் ரூபாய் கூடுதல் நிதி பெறவுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில், விற்பனையாளர்களுக்கு தர வேண்டிய பாக்கி பணத்தை செலுத்துவதற்காக ஏர் இந்தியா விமானம் கூடுதல் நிதி பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 பில்லியன் ரூபாய் பணத்தை விற்பனையாளர்களுக்கும், வங்கிகளுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் செலுத்த வேண்டி உள்ளது. இந்த ஆண்டிற்கான நிதியில், ஏற்கனவே 6.5 பில்லியன் ரூபாய் அரசிடம் இருந்து பெற்ற நிலையில், அடுத்த 7-10 நாட்களில் ஏர் இந்தியாவிற்கான கூடுதல் நிதி வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, அரசு தரப்பில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும், ஏர் இந்தியாவின் பங்குகளை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பணத்தை தர கோரி ஸ்டாண்டர்டு சார்டர்டு அகவுண்ட், தீனா வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளில் இருந்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.