இன்று அதிகாலை முதல் இந்தப் பிரச்னை நீடித்து வருவதால், பல நூறு பயணிகள் விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
New Delhi: ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான சர்வரில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அந்த நிறுவனத்தின் விமான சேவைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் இந்தப் பிரச்னை நீடித்து வருவதால், பல நூறு பயணிகள் விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
மும்பை, டெல்லி போன்ற விமான நிலையங்களில் தாங்கள் வெகு நேரமாக காத்துக் கிடக்கிறோம் என்று பல பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
'SITA மென்பொருளில் பிரச்னை இருப்பதால் சுமார் 2,000 பயணிகள் மும்பை விமான நிலையத்தில் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்' என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ஏர் இந்தியா தலைவர் அஷ்வானி லோகானியிடம் பேசினோம். ‘ஏர்லைன்ஸின் பயணிகள் சிஸ்டம் டவுனாக உள்ளது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு. சீக்கிரமே சரி செய்யப்பட்டுவிடும்' என்று மட்டும் கூறியுள்ளார் லோகானி.
'எங்களின் SITA மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது தொழில்நுட்பக் குழு பிரச்னையை சரிசெய்ய முயன்று வருகிறது. சீக்கிரமே பழைய நிலைமை திரும்பும். சிரமத்துக்கு வருந்துகிறோம்' என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.