விமானத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Patna: பீகார் மாநிலம் பாட்னாவில், விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண பயத்தை ஒருவர் காட்டியுள்ளார். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
டெல்லியில் இருந்து அஜ்மீருக்கு நேற்று சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று நடுவானில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, அதில் இருந்த ஒரு பயணி கழிவறைக்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவர் கழிவறை செல்வதற்கு பதிலாக விமானத்திலிருந்து வெளியே செல்லும் கதவைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால்அதிர்ச்சயடைந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.
இதையடுத்து விமான நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை விடுவித்தனர். விசாரணையில் அவர் இப்போதுதான் முதன்முறையாக அவர் விமானத்தில் பயணிக்கிறார் என்பது தெரியவந்தது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)