Read in English
This Article is From Oct 09, 2018

டெல்லியில் காற்று மாசுபாடு 2-வது நாளாக தொடர்கிறது

அதிகளவில் காற்று மாசுபட்டிருப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Advertisement
நகரங்கள்

திங்களன்று காற்று மாசுபாட்டின் அளவு 262 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

New Delhi:

காற்று எந்த அளவுக்கு தூய்மையாக உள்ளது என்பது AQI எனப்படும் air quality index என்ற அளவால் அளவிடப்படுகிறது. இதன் மதிப்பு 0-50 ஆக இருந்தால், அந்த பகுதியில் உள்ள காற்று மிகவும் தூய்மையாக உள்ளதென்று அர்த்தம். 51-100 ஆக இருந்தால், காற்றின் தூய்மை திருப்திகரமாக உள்ளது என்று பொருள்.

101-200 என இருந்தால், மிதமாக உள்ளதென்றும், 201-300 ஆக இருந்தால் மோசம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
401-500 என இருந்தால் காற்று மாசு கடுமையாக உள்ளது என்று அர்த்தம்.

இந்த நிலையில் டெல்லியை பொறுத்தவரையில் நேற்று காற்று மாசு அளவு 262 புள்ளிகளாக இருந்தது. அப்படியென்றால், சற்று மோசமான நிலையில்தான் காற்றின் தூய்மை உள்ளது என்று பொருள்.

Advertisement

இந்த சுற்றுச் சூழல் மாசுபாட்டிற்கு பஞ்சாப் மற்றும் அரியானாவில், விவசாய கழிவுகளை அங்குள்ளவர்கள் எரிப்பதால் எழும் புகை மண்டலமே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்றைக்கு 2-வது நாளாக காற்று மாசுபட்டுள்ளது.

காற்று மாசின் அளவு 256 புள்ளிகளாக இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக குர்கான் மற்றும் காசியாபாத் பகுதிகளில் முறையே 328 மற்றும் 307 புள்ளிகளாக காற்று மாசின் அளவு உள்ளது.
 

Advertisement
Advertisement