This Article is From Dec 28, 2018

மேகாலயா: சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை

சுரங்கத்தில் சிக்கியர்வர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து வரும் நிலையில், இறுதிக்கட்ட முயற்சியாக மீட்பு பொருட்களுடன் இந்திய விமானப்படையின் விமானம் விரைந்துள்ளது.

மேகாலயா: சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை

ஒடிசா தீயணைப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விமானத்தில் மீட்பு பொருட்களை ஏற்றும் காட்சி

Guwahati/New Delhi:

மேகாலயாவில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் இறுதிக்கட்ட முயற்சியாக இந்திய விமானப்படையின் விமானம் அங்கு விரைந்திருக்கிறது. 15 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 15 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பொருட்களுடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மீட்பு விமானம் மேகாலயா சென்றுள்ளது.

முன்னதாக குறைந்த விசையழுத்தம் கொண்ட மோட்டார் பம்புகளை பயன்படுத்தி சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்ற முயற்சிகள் நடந்தன. இந்த முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து இன்றைக்கு புதிய மீட்பு பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேபோன்று அருகில் உள்ள சுரங்கத்திலிருந்தும், ஆற்றில் இருந்தும் நீர் வந்து கொண்டிருப்பதால் எவ்வளவு நீரை வெளியேற்றினாலும் மீண்டும் நீர் நிறைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 13-ம்தேதியில் இருந்து சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வருகின்றனர்.


மேகாலயா சுரங்க தொழிலாளர்கள் தொடர்பான 10 தகவல்கள்

1. மார்ட்டின் சி - 130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மீட்பு பொருட்களுடன் மேகாலயா வரவுள்ளது. இந்த பொருட்கள் ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்வதற்கு கடினம் என்றால் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படும்.

2. தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இந்திய விமானப்படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.

3. கிழக்கு ஜெய்ந்தியாவின் கமிஷன் ஒரு வாரத்திற்கு முன்பாக மேகாலயா அரசுக்கு கடிதம் எழுதி உதவி கேட்டார். அதன் தொடர்ச்சியாக ஒருவார காலத்திற்கு பின்னர் தற்போது விமானப்படையின் உதவி கிடைத்திருக்கிறது.

4. சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு அதிக சக்தி மிக்க மோட்டார் பம்புகள் தேவை. இவை மேகாலயாவின் சுற்று வட்டார பகுதிகளில் இல்லை.

5. மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்டில் இருந்து உயர் அழுத்தம் கொண்ட பம்புகள் மேகாலயாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவை சாலை மார்க்கமாக செல்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. மேகாலயாவுக்கு கொண்டு செல்லப்படும் பம்புகள் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்த பம்புகள் தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்பதற்கு பயன்படுத்தப்பட்டவை.

7. கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. நேற்றைய தினம் சுரங்கத்தில் இருந்து அருவருக்கத்தக்க வாடை வெளிவரத் தொடங்கியது. இதன் பின்னர் மீட்பு படையினர் இந்த விவகாரத்தை சற்று சீரியஸாக கையாளத் தொடங்கியுள்ளனர்.

9. இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை முதல்வர் கோன்ராட் சங்மா மறுத்திருக்கிறார்.

10. புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் மோடிக்கு சுரங்கத் தொழிலாளர்களை மீட்க நேரமில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

.